அட்லீயின் அடுத்த ஹீரோ இவரா..??
இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி மூலம் அறிமுகமாகி, விஜய்யை வைத்து தெறி மற்றும் மெர்சல் என்னும் இரண்டு மெஹா சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
இந்த இரு படத்தின் ஹிட்டிற்கு பிறகு அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்செய்தி குறித்து அட்லீ வட்டாரத்தில் விசாரித்த போது இன்னும் படத்தின் ஹீரோ குறித்து முடிவு எடுக்கவில்லை எனவும் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....

