சென்னைக்கு பஸ் பிடித்து வந்து ‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..!
ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில்,வீணாவின் அண்ணனாக, படத்தை தாங்கி கொண்டுபோகிற, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் எம்.எஸ்.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜெய்சந்திராவின் கணவர் தான்..
இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர். உத்தமராசா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.. வி.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தில் ராஜேஷ் கண்ணன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இந்...
