Wednesday, October 28
Shadow

Tag: #tholkaapiyar #vairamuthu

தொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு

தொல்காப்பியர் விழா – கவிஞர் வைரமுத்து பேச்சு

Latest News, Top Highlights
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தொல்காப்பியர் குறித்த ஆய்வுக்கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் விழாவுக்குத் தலைமை வகித்தார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காய்ச் சுருங்கிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்தார். அவர் உரை விவரம் வருமாறு : தொல்காப்பியம் கட்டிக்கொடுத்த கட்டுமானத்தின்மீதுதான் மூவாயிரம் ஆண்டு நீண்ட தமிழ் நின்று நிலைகொண்டிருக்கிறது. எத்தனையோ அரசு அதிகாரங்களும் ஆட்சி அதிகாரங்களும் தோன்றித் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் தொல்காப்பியத்தின் எழுத்து – சொல் – பொருள் என்ற மூன்று அதிகாரங்களும் இன்றுவரை அழியாமல் தமிழை ஆண்டுகொண்டிருக்கின்றன. 68 ஆண்டுகொண்ட இந்திய அரசமைப்புகூட 101 முறை திருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முற்...