புதுமுக நடிகர் எம் எஸ் குமாருக்கு இயக்குநர் பாக்யராஜ் பாராட்டு!
J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..
வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..
தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.
என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார்...
