டிக் டிக் டிக் வெற்றி சந்திப்பில் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம் ரவி மகன் ஆரவ்
நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார்.
மகிழ்ச்சியான தயாரிப்பாளர் என்ற வார்த்தையே இன்று இல்லாமல் போய் விட்டது. இந்த படத்தின் வெற்றி யாருக்கும் பொறாமை தராத ஒரு வெற்றி. இந்த மாதிரி ஒரு புதுக்களத்தை தமிழ் சினிமாவில் எடுத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்தது இயக்குனர் சக்தியின் வெற்றி. அத...


