Monday, May 25
Shadow

Tag: #Tollywood

ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்

ஸ்ரீதிவ்யாவின் புதிய திட்டம்

Latest News, Top Highlights
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு ஜீவா, ஈட்டி, பென்சில், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த ஆண்டும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் மட்டுமே ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார். சமீப காலமாக அவருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் மட்டுமே கையில் இருக்கிறது. எனவே, தனது சொந்த மொழியான தெலுங்கில் கூடுதல் கவனம் செலுத்தி ஸ்ரீதிவ்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் வாய்ப்புகளை பெற ஸ்ரீதிவ்யா அங்குள்ள இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்....