Monday, April 20
Shadow

Tag: #TrafficRamasamy

அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி

அப்துல் கலாமின் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி

Latest News, Top Highlights
சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT பொறியியல் கல்லூரியில் தான் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஏரோஸ்பேஸ் இஞ்சினியரிங் படித்தார். அந்த கல்லூரியில் கடந்த சனிக்கிழமை சுமார் மூவாயிரம் பொறியியல் மாணவர்கள் மத்தியில் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் டைட்டில் டிசைன் அறிமுக விழா நடந்தது. அதில் மாணவர்கள் ஹரிஷ், மற்றும் ரேஷ்மா டைட்டிலை வெளியிட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அப்துல் கலாம் படித்த எங்கள் கல்லூரியில் டிராஃபிக் ராமசாமி பட டைட்டிலை வெளியிட்டதை மிகுந்த பெருமையாக கருதுவதாக மாணவர்கள் தெரிவித்தனர். படம் பற்றி திரு.எஸ்.ஏ சந்திரசேகரன் அவர்கள் கூறும்போது, ‘யாரையும் எதிர்பார்க்காமல் எளியவர்களுக்கு ஆதரவாகவும் அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் ஒன் மேன் ஆர்மியாக ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் போராளியின் படத்தை நாட்டு மக்களுக்கு சரியாகக் கொண்டு சேர்க்க தான் ...
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!

Latest News
வளர்ந்து வரும் 'டிராபிக் ராமசாமி' படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது : "நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் , செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. 'டிராபிக்ராமசாமி' என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது. 'நான் சிகப்பு மனிதன்'என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ் .ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக ந...