“மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ட்ரெயின்’ புறப்படத் தயாராகிறது… சத்தியம் சினிமாஸில் உணர்வுகளால் நிரம்பிய இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!”
"மிஷ்கின் - விஜய் சேதுபதி கூட்டணியின் 'ட்ரெயின்' புறப்படத் தயாராகிறது... சத்தியம் சினிமாஸில் உணர்வுகளால் நிரம்பிய இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா!"
சென்னை: வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ட்ரெயின்' திரைப்படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னை சத்தியம் சினிமாஸில் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினர்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு, "மிஷ்கின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் இந்தப் படத்தின் கதையையே கேட்காமல் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்திற்காக பிரம்மாண்டமான ரயில் செட் அமைக்கப்பட்டது. விஜய் சேதுபதி அளவில்லா உழைப்புடன் நடித்துள்ளார். ...
