யோகிபாபு , கருணாகரன் இணையும் “ட்ரிப்” அட்வெண்ஞ்சர் காமெடி, பயணம்
யோகி பாபு கருணாகரன் இருவரும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகர்கள். இருவரும் வேறு வேறு பாதையில் ரசிகர்களை தங்களது தனிப்பட்ட திறமைகள் மூலம் கவர்ந்து தங்களுக்கான தடத்தை பதித்தவர்கள். அந்த வகையில் தற்போது இருவரும் இணைந்து டார்க் காமெடி கலந்த, சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படமான “ட்ரிப்” மூலம் ரசிகர்ளை மகிழ்விக்க வருகிறார்கள். “டார்லிங்” , “100” படங்களின் இயக்குநர் சாம் ஆண்டனின் இணை இயக்குநர் டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் டென்னிஸ் படத்தினை பற்றி கூறியது..
“ட்ரிப்” திரைப்படம் உல்லாச பயணத்தை அடிப்படையாக
கொண்டது. இது ஒரு டார்க் காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன், திரில்லர். இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள் வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது. இடையில் அவர்கள் வேறு ஒரு ப...
