Tuesday, April 28
Shadow

Tag: #unnikirshnan #birthday

தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர பி. உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம்

தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர பி. உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம்

Latest News, Top Highlights
கர்நாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். உன்னிகிருஷ்ணன் சூலை 9, 1966 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் திரு.ராதா கிருஷ்ணன், திருமதி.ஹரிணி ஆகியோருக்கு பிறந்தார். இவர் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம் பெற்றார். அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இச...