தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாகும் ‘எல்லம்மா’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
தேவி ஸ்ரீ பிரசாத் ஹீரோவாகும் ‘எல்லம்மா’… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
இசையமைப்பாளராகவும், பாடகராகவும் ரசிகர்களைக் கவர்ந்த தேவி ஸ்ரீ பிரசாத், தற்போது கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘பலேகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வேணு யெல்தண்டி, இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தை தில்ராஜு வழங்குகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக ...

