2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் !!!!
வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24, மகளிர்மட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வரை சமூக நோக்கிலான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை 'உறியடி' பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். உறியடி படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்...
