தமிழ் சினிமாவில் நேரடி அறிமுகமாகும் அமிதாப்பச்சன் S.J.சூர்யாவுடன் இணைகிறார்
குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அவரது நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து விஜயுடன் 'சர்க்கார்', மற்றும் இறவாக்காலம் உள்ளிட்ட படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அடுத்தப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக டிவிட்டரில் அறிவித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அது என்னவாக இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.ஜே.சூர்யா, 'தான் அடுத்ததாக தமிழ்வாணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் முக்கிய வ...
