பிரமாண்டமாக அரங்கேறிய “வெடிகுண்டு பசங்க” இசை வெளியீடு
சமீப காலமாக சென்னையில் அதிகரித்து வரும் செயின் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே பாலு, “வீடு புரொடக்ஷன்ஸ்” சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் “வெடிகுண்டு பசங்க”. முழுக்க முழுக்க மலேசியாவில் நடப்பது மாதிரியான கதைப் பின்னணி கொண்ட இப்படத்தில் வழிப்பறிக் கும்பல்களின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
விமலா பெருமாள் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக தினேஷ் குமார் (தேவா), நாயகியாக சங்கீதா கிருஷ்ணசாமி (வித்யா) நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
டோரா, குலேபகாவலி படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். பி சிதம்பரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, ஆனந்த் ஜெரால்டின் ...
