‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது
‘மஹாசக்தி’யின் எழுச்சி ஆரம்பம்! – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானது
சுந்தர். சி இயக்கத்தில் பிரம்மாண்டமான மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னர் – தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், ரசிகர்களை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பிரம்மாண்டமாக திரையில் வழங்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 : மஹாசக்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘Rise of Mahasakthi’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ள இந்த டீசர், திரைப்படம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்க இருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ...



