சமுக வலைத்தளங்களை மெர்சல் பண்ணிய ஆளபோறான் பாடல்
'மெர்சல்' படத்தின் முதல் பாடலாக 'ஆளப்போறான் தமிழன்' பாடல், சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது. அன்று முதலே பலராலும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டன. மேலும், யூ-டியூப் தளத்தில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ பதிவுகளும் வெளியிடப்பட்டது. இதில் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் வரிகள் வீடியோ 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
மேலும், அனைத்து இசைக் கேட்கும் சமூகவலைதளங்களிலும் இப்பாடல் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. இதனை 'மெர்சல்' படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கும் சோனி மியூசிக் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்து தளங்களிலும் முதல் இடத்தில் நீடிக்கும் பாடல் 'ஆளப்போறான் தமிழன்' மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா ம...
