குறும்படம் மூலம் நடிப்பில் கால் பதிக்கும் தளபதி மகன் சஞ்சய்
தமிழ் சினிமாவின் உச்சம் என்றால் அது தளபதி விஜய் என்று சொன்னால் அது மிகையாகாது மனித நேயத்திலும் சரி மிகவும் சிறந்த மனிதர் ரசிகர்களின் தோழர் என்றும் சொல்லலாம் மற்றவர்களை மிகவும் மதிக்க தெரிந்தவர். சமீபத்துல இந்திய சினிமாவுக்கு பேர் வாங்கி கொடுத்தவர் சர்வதேச சிறந்த நடிகர் பட்டமும் பெற்று பெருமை தேடித்தந்தவர்.இவர் மகன் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தான் இந்த செய்தி.
நடிகர் விஜயின் மகன் சஞ்சய். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தின் பாடல் ஒன்றிற்கு விஜயுடன் சேர்ந்து நடனமாடிய சஞ்சய், விரைவில் சினிமாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதை நிரூபிக்கும் வகையில் குறும்படம் ஒன்றில் சஞ்சய் நடித்துள்ளார். ஜங்ஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 விநாடிகள் இடம்பெற்றுள்ள இந்த குறும்பட டிரைலரில் சிறுவர்கள் இருவர் வீடியோ கேம் விளையாடுகின்றனர். அவர்கள் அருகில...
