கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பிறந்த தினம்
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர் மற்றும் பேராசிரியர் ஆவார். தமிழ் நாட்டுப்புறப் பாடல்களை உயிர்ப்பிக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.
மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இ...
