போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம் : இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு !
கிரீன் சிக்னல் வழங்கும்' டிராஃபிக் ராமசாமி 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,
"நான் 40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் கேட்ட போது விழா எப்போது? என்றவர் , எங்கிருந்தாலும் வருவேன் என்றார். அவருக்கு நன்றி. காதலா , கோபமா , வீரமா , சமூக சிந்தனையா , மண் வாசனையா எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.
உலகமே வியக்கும் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது.இங்கே இருக்கும் ராஜேஷ், பொன்ராம்; அவரு...
