‘கோலி சோடா 2’ – கடையை மூடினார் விஜய் மில்டன்
சில படங்கள் மட்டும் தான் நட்சத்திரங்கள் இல்லாவிட்டாலும் கதை பலத்தால் பெரும் வெற்றி பெற்று அடுத்த பாகங்களுக்கு வழி வகுக்கும். இது போன்ற ஒரு படம் தான் 'கோலி சோடா'. சில வருடங்களுக்கு முன்பு ரிலீசான இப்படம் அசத்தலான வெற்றியை பெற்றது. இப்படத்தின் அடுத்த பாகம் 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. 'கோலி சோடா 2' படத்தின் நடிகர்கள் மற்றும் கதை பின்னணி வேறாக இருந்தாலும், 'கோலி சோடா' முதல் பாகத்தின் சாராம்சம் இப்படத்தில் நிச்சயம் இருக்கும் என இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியிருந்தார்.
தற்போது, 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட பணிகளை விரைவில் முடிக்க படக்!குழு திட்டமிட்டுள்ளது.
படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், '' நாங்கள் திட்டமிட்டபடியே 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி...