
மன்னர் வகையறா ( காமெடி வகையறா) – திரைவிமர்சனம் Rank 3/5
கடந்த ஒரு வருட காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் தற்போது ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்து தயாரித்தும் இருக்கிறார் நடிகர் விமல்.
ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கோலிவுட்டிற்கு காலடியெடுத்து வைத்திருக்கிறார் விமல். புகழ் பெற்ற இயக்குனர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘மன்னர் வகையறா’ என்ற படைப்பின் மூலம் விமல் ரீ எண்ட்ரீ ஆகியுள்ளார்.
நாயகன் விமல் சட்ட படிப்பு படித்து வருகிறார். இவரது மாமனாக வருகிறார் ரோபோ ஷங்கர். படத்தின் ஆரம்பம் முதல் இருவரின் காமெடி கலாட்டா அரங்கேறுகிறது. பின், நாயகி ஆனந்தி எண்ட்ரீ. நாயகியுடனான காதல், என ஒரு புறம் கதை நகர, விமலின் அப்பாவாக வரும் பிரபு, ஊருக்கு நண்மை புரிய வில்லனின் பகையை சம்பாதிக்கிறார்.
இந்நிலையில் ஆனந்தியின் அக்காவாக வரும் சாந்தினியை, விமலின் அண்ணன் கார்த்திக் விரும்ப, திருமண பந்தலில் இருந்து அண்ணனுக்காக சாந்தினியை தூக்கி செல்கிறார் விமல...