இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அ.வின்சென்ட் பிறந்த தினம்
கேரள மாநிலம், கோழிக்கோடில் பிறந்த வின்சென்ட் 1960 காலகட்டத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழில், அமர தீபம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
தொடர்ந்து உத்தம புத்திரன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, கவுரவம், வசந்த மாளிகை, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். அதோடு 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் உள்ளார் வின்சென்ட். இந்தியில், இவர் ஒளிப்பதிவு செய்த பிரேம் நகர் என்ற படத்திற்காக பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.
1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் ...
