விவேகம் படத்தில் காட்சிக்கு காட்சி மிரட்டும் அஜித் சொன்னது யார் தெரியுமா?
ஒரு திரைப்படத்தை ஆக்கவும் அழிக்கவும் கூடிய சக்தி வாய்ந்தது அதன் படத்தொகுப்பு. திறமையாக , நேர்த்தியாக படத்தொகுப்பு செய்யப்பட்ட எந்த ஒரு படமும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி கண்டுள்ளது. பெரிய பட்ஜெட் ஆக்ஷன் படமான 'விவேகம்' போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் படத்தொகுப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. தனது புதுமையான விறுவிறுப்பான 'கட்' களால் தமிழ் சினிமாவின் முக்கிய படத்தொகுப்பாளர்களில் ஒருவரான ரூபன், அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடித்து, சிவா இயக்கத்தில் , சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் , வெற்றியின் ஒளிப்பதிவில் உருவாகி , ஆகஸ்ட் 24 ஆம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாய் ரிலீஸாகவுள்ள 'விவேகம்' படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.
இது குறித்து படத்தொகுப்பாளர் ரூபன் பேசுகையில், '''விவேகம்',படம் முழுவது கைதட்டி கொண்டாடக்கூடிய, ஒரு ...
