அறிமுக இயக்குனர் பாலைய்யா இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் டார்க் காமெடி படம்
தமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெறுகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.
"இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர்களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன...
