Wednesday, June 24
Shadow

Tag: #சி.வி.குமார்

டைட்டானிக் கதையின் உல்டா புல்டா!

டைட்டானிக் கதையின் உல்டா புல்டா!

Latest News, Top Highlights
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சி வி குமார் தயாரிப்பில் உருவாகி வரும் ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்ற 'மாயவன்' படத்தைத் தொடர்ந்து '4ஜி' மற்றும் 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார் சி.வி.குமார். இதன் இரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 'டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளது படக்குழு. ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக க்ரிஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்....
மாயவன் – திரை விமர்சனம் Rank 2/5

மாயவன் – திரை விமர்சனம் Rank 2/5

Review, Top Highlights
குற்றவாளி ஒருவனை துரத்திக் கொண்டு ஓடும் போலீஸ் அதிகாரியான சந்தீப் கிஷன், திறந்திருந்த வீடு ஒன்றில் ஒருவர் தனது மனைவியை துடிதுடிக்க கொலை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். பின்னர் சந்தீப்புக்கும் அவருக்கும் நடந்த சண்டையில், சந்தீப் கொலையாளியை கொன்று விடுகிறார். கொலையாளியுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு பணிக்கு திரும்புகிறார். அவர் பணியில் சேர்வதற்கு முன்பு மருத்துவரிடம் இருந்து சரியான மனநிலையில் இருப்பதற்கான சான்றிதழ் வாங்கி வரும்படி அவரது உயர் அதிகாரி உத்தரவிடுகிறார். அதன்படி மனநல மருத்துவரான லாவண்யா திரிபாதியிடம் செல்லும் சந்தீப், சரியான மனநிலையில் இல்லை என்றும், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் லாவண்யா கூறுகிறார். லாவண்யாவின் பேச்சை கேட்காமல் மீண்டும் பணிக்கு திரும்பும் சந்தீப் அடுத்ததாக மற்றொரு கொலையை பார்க்க...