சென்னையில் நடக்கிறது நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து
நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சென்னையில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் கலந்து கொள்ளும் தெருக்கூத்து நிகழ்ச்சி. 'வெங்காயம் ' திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நடத்தும் 'சென்னையில் தெருக்கூத்து'.
சென்னையில் நந்திவர்மன் வரலாறு குறித்த தெருக்கூத்து நிகழ்ச்சி சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான தெருக்கூத்துக் கலை நலிவுற்று இருக்கும் நிலையில், அதனை தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்கும் ரசிக்கின்ற வகையில் நவீனப்படுத்தி, கால அளவை குறைத்து, சுவாரஸ்யமான நடையில் மக்களிடம் கொண்டு செல்ல சில முன்னெடுப்புகளைச் செய்து வருபவர் 'வெங்காயம் ' திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.
திருக்குறளை கிராமப்புற மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து குறளையும் தெருக்கூத்து வடிவில் தயாரித்து வருகிறார...
