Monday, November 9
Shadow

Tag: நம்பியார் – திரை விமர்சனம் காமெடி மேஜிக் (5/3)

நம்பியார் – திரை விமர்சனம் காமெடி  மேஜிக் (5/3)

நம்பியார் – திரை விமர்சனம் காமெடி மேஜிக் (5/3)

Review
கோல்டன் பிரைடே பிலிம்ஸ் பேனரில் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் வழங்க, கணவர் ஸ்ரீகாந்த் கதாநாயகராக நடிக்க, அவரது ஜோடியாக சுனைனா நடித்து வெளி வந்திருக்கும் படம் தான் நம்பியார். எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதர்களின் மனதிலும் வில்லன் நம்பியார் மாதிரி ஒரு கெட்டமனசாட்சி ஒளிந்து கொண்டிருக்கும் அது செய்யும் சுயநலகெட்ட செயல்களால் நல்ல மனிதன் எப்படி எப்படி எல்லாம் தலை குனிவான்? சமயத்தில் எதிராளிகளின் துப்பாக்கி தோட்டாக் களுக்கு அவனது தலையே எப்படி குறியாகும்…? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘நம்பியார்’. இதில், எம் ஜி ஆர் மாதிரி நல்ல மனிதராக ஸ்ரீகாந்த்தும் அவரது கெட்டமனசாட்சி வில்லன் நம்பியாராக சந்தானமும் படம் முழுக்க பட்டையை கிளப்புகிறார்கள். ராமு எனும் ராமசந்திரனாக, ஸ்ரீ, தண்ணியை போட்டால் நம்பியாராக பண்ணும் தகராறுகள் செம்ம… சுனைனாவிடம் தன் கெட்ட குணங்கள் எல...