Sunday, June 21
Shadow

Tag: #விக்ரம்

அடுத்த கட்டத்திற்கு செல்லும் துருவ நட்சத்திரம்

அடுத்த கட்டத்திற்கு செல்லும் துருவ நட்சத்திரம்

Latest News, Top Highlights
விக்ரம் கைவசம் கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’, ஹரியின் ‘சாமி ஸ்கொயர்’, ஆர்.எஸ்.விமலின் ‘மஹாவீர் கர்ணா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக நிற்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய வேடங்களில் இயக்குநர் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், வம்சி, திவ்யதர்ஷினி, மாயா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இதற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘கொண்டாடுவோம் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனங்களுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தனது ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் இரண்டு ஸ்டைலிஷ் டீசர்கள் ரசிக...
`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

`சாமி ஸ்கொயர்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் `சாமி ஸ்கொயர்' படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் `சாமி ஸ்கொயர்' படத்தில் விக்ரம், தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவின் மகன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபு, விவேக், சூரி, ஜான் விஜய், உமா ரியாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்த...
விக்ரமின் தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் காலமானார்

விக்ரமின் தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் காலமானார்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். அவரது தந்தையும், நடிகருமான வினோத் ராஜ் (80) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர், பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ படத்தில் திரிஷாவிற்கு அப்பாவாகவும், `திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் அப்பாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச் சடங்கு நாளை மாலை நடக்க இருக்கிறது. இறுதி அஞ்சலிக்காக இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது....
`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

Latest News, Top Highlights
ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி. தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். த்ரிஷா விலகியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் ஒருமாதிரியாக கிடைத்திருக்கிறது. `சாமி ஸ்கொயர்' படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. வெளியான புகைப்படங்களில் `சாமி' படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், அவருக்கு சிலை வைக்கப்படுவதாகவும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாகவும் அந்த புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிகிற...
இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

இருமுகன் இயக்குனருடன் இணையும் அர்ஜுன் ரெட்டி நாயகன்

Latest News, Top Highlights
‘அரிமா நம்பி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். அதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து ‘இருமுகன்’ படத்தை இயக்கினார். இரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தில், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ரசிகர்களிடையேயும், வணீக ரீதியாகவும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், அதனை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பதில் புதிர் வைத்திருந்தார் ஞானவேல் ராஜா. இந்த புதிருக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தெலுங்க...
பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

பொங்கல் திருநாளில் ஸ்கெட்ச் போட வரும் விக்ரம்

Latest News, Top Highlights
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் பின்னணி பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகி உள்ள ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் பொங்கல் திரு நாளன்று படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம், தமன்னாவுடன் இப்படத்தில், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்....
பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

பொங்கல் ரேசில் இருந்து விலகிய விக்ரமின் ‘ஸ்கெட்ச்’

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படம் பொங்கலுக்கு ரிலீசாகாது என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். விக்ரம், தமன்னா அவர்களது காட்சிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே சமயத்தில் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடசெ...