Sunday, October 1
Shadow

`சாமி-2′ படத்தில் இருந்து திரிஷா விலகியதற்கு இதுதான் காரணம்?

ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’.

இதில் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.

தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். த்ரிஷா விலகியதற்கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கான காரணம் ஒருமாதிரியாக கிடைத்திருக்கிறது.

`சாமி ஸ்கொயர்’ படம் சம்பந்தமான சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. வெளியான புகைப்படங்களில் `சாமி’ படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், அவருக்கு சிலை வைக்கப்படுவதாகவும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாகவும் அந்த புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதிலிருந்து ஆறுச்சாமி, ஆறுச்சாமியின் மகன் என இரு கதாபாத்திரங்களில் விக்ரம் நடிக்கிறார். இதில் ஆறுச்சாமியின் மகன் ஜோடியாகவே கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.

எனவே, நடிகை கீர்த்தி சுரேஷூக்கு மாமியாராக திரிஷாவை நடிக்க சொன்னதால் தான் அவர் நடிக்க மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.

‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

Leave a Reply