Monday, January 17
Shadow

நடிகர் ரவிச்சந்திரன் பிறந்த தின பதிவு

1960கள்-70களில் முன்னணி கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர். திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

ரவிச்சந்திரனின் இயற்பெயர் ராமன். திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 1951ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகு திருச்சியில் உள்ள புனித யோசப் கல்லூரியில் படித்தார்.

ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது. ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார். அறிமுக படமே அவருக்கு சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. அத்துடன் அவருக்கு நல்ல ‌பெயரை பெற்று தந்தது. அதிலும் அந்தபடத்தில் வந்த “விஸ்வநாதன் வேலை வேண்டும்…” , “உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா…” உள்ளிட்ட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.

“காதலிக்க நேரமில்லை” படத்திற்கு நிறைய படங்களில் நடித்தார் ரவிச்சந்திரன். குறிப்பாக இவர் நடித்த “அதே கண்கள்”, “இதய கமலம்”, “கெளரி கல்யாணம்”, “குமரிப்பெண்”, “உத்தரவின்றி உள்ளே வா” உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரவிச்சந்திரனும் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். ரவிச்சந்திரன் ஸடைல் அப்போதைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கல்லூரி, பள்ளி மாணவிகள் ரவிச்சந்திரனின் தீவிர ரசிகைகளாய் இருந்தனர். அவர் படங்கள் 150 நாட்களை தாண்டி ஓடின.

ஹீரோக்கள் நடித்த காலம் போய், பின்னர் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த ரவிச்சந்திரனுக்கு விஜயகாந்தின் “ஊமை விழிகள்” படத்தின் மூலம் மீண்டும் புத்துணர்வு கிடைத்தது. அந்தபடத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அப்பா, தாத்தா போன்ற குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார் ரவிச்சந்திரன்.

ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘ஊமை விழிகள்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். அதன்பின், உறுதுணை கதாப்பாத்திரங்களில் வலம் வந்தார். ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’, கமல்ஹாசனுடன் ‘பம்மல் கே சம்பந்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக 25-07-2011 அன்று இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மனைவி விமலா அவர்களை 1963ம் ஆண்டு மனம் முடித்தார் அவர்களுக்கு இரண்டு மகன்கள் முதல் மகன் பாலாஜி இவர் தொழில் அதிபர் இரண்டாவது மகன் ஹம்சவரதன் இவர் பிரபல ஹீரோ என்பது நாம் அறிந்த விஷயம் லாவண்யா என்ற மகளும் உள்ளார் மலையாள முன்னணி நடிகை ஷீலாவை இரண்டாவதாக 1972ம் ஆண்டு மணம் புரிந்து பின்னர் இவருக்கும் ஷீலாவிற்கும் பிறந்த ஜார்ஜ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

இவருக்கு பாலாஜி, அம்சவர்தன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் ஹம்சவர்தன பல படங்கள் நடித்துள்ளார் தற்போது இரண்டு படங்கள் நடித்து வருகிறார் ஒன்று பீட்ரு மற்றொன்று இன்னும் பெயர் வைக்கவில்லை  அவரின் அண்ணன் பாலாஜி தொழில் செய்து வந்தார். சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சென்னையில் மரணமடைந்தார்.

இவர் நடிகராக நடித்த படங்கள்

ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார்.

இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கெளரி கல்யாணம், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி. மற்றும் பல படங்கள் அடங்கும்

இவர் இயக்குனராக பணியாற்றிய படங்கள்:  மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை இயக்கினார்.

இவர் தயாரிப்பாளராக பணியாற்றிய படங்கள்:  தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார்.

CLOSE
CLOSE