
“தமிழ் திரையுலகம் என் வீடு; இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” – ‘எங்கள் தங்கம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமந்தா நெகிழ்ச்சி!
சென்னையில் நடைபெற்ற ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா உற்சாகமான சூழலில் நடைபெற்றது. நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம், “This GOLD is BLOODY BOLD” என்ற வித்தியாசமான டேக் லைனுடன் உருவாகி, வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ISC, ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் தங்களுக்கெல்லாம் மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். வழக்கமாக காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு படங்களை இயக்கும் நந்தினி ரெட்டி, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்துள்ளதாகவும், சமந்தா இதுவரை காணாத அளவிற்கு அதிரடி காட்சிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். டிரெய்லரில் தெரியும் விறுவிறுப்பும் ஆற்றலும் முழுப் படத்திலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகை கௌதமி, இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானதாக இருந்ததாக கூறினார். படப்பிடிப்பு தொடங்கி முடியும் வரை மகிழ்ச்சியான சூழல் நிலவியதாகவும், திரைப்படத்தை ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் அதன் பின்னணியில் இருந்த சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி போன்ற திறமையான மனிதர்கள்தான் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் படத்தின் வெற்றி ‘உமன் பவர்’ காரணமாக அல்ல; இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் அர்ப்பணிப்பும் காரணமாக அமையும் எனக் கூறிய அவர், சிறந்த கதை, தரமான தயாரிப்பு, வலுவான நடிப்பு மற்றும் இசை ஆகிய அனைத்தும் இப்படத்தின் பலமாக இருப்பதாக பாராட்டினார்.
விழாவின் முக்கிய ஈர்ப்பாக இருந்த நடிகை சமந்தா, சென்னை நகரம் தனக்கு எப்போதும் சொந்த வீட்டைப் போன்ற உணர்வை அளிப்பதாக தெரிவித்தார். கல்லூரி நாட்களில் வாழ்ந்த பகுதியிலேயே இன்று இந்த நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமான படங்களில் நடித்திருக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்றும் பகிர்ந்துகொண்டார்.
நல்ல கதைகளும் வலுவான கதாபாத்திரங்களும் கிடைத்தால் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்த சமந்தா, பல ஆண்டுகளாக குறைவான தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் அன்பும் ஆதரவும் தன்னை நெகிழ்ச்சியடையச் செய்கின்றன என்றார்.
‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றிய அனுபவம், ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் உள்ள சவால்களை முழுமையாக புரிய வைத்ததாக அவர் குறிப்பிட்டார். குறிப்பாக இறுதிக்கட்ட பணிகள் கடினமாக இருந்தபோதிலும், சிறந்த திரைப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், நடிகை கௌதமி மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பையும் பாராட்டிய சமந்தா, ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை பெருமைப்படுத்தும் படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
குடும்ப உணர்வுகள், அதிரடி, மனித உறவுகள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றை இணைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து திரைக்கதை எழுதியுள்ள நிலையில், கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.
படத்தொகுப்பை தர்மேந்திர ககராலா, கலை இயக்கத்தை உல்லாஸ் ஹைடூர் மேற்கொண்டுள்ளனர். அதிரடி காட்சிகளுக்காக சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் பணியாற்றியுள்ளனர்.
சமந்தாவின் புதிய தோற்றம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் அதிரடி நிறைந்த டிரெய்லர் ஆகியவை ஏற்கனவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘எங்கள் தங்கம்’ இந்த கோடைகாலத்தின் முக்கிய திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக அமையும் என்ற நம்பிக்கை திரையுலக வட்டாரங்களில் நிலவுகிறது.
உலகம் முழுவதும் ஜூன் 19, 2026 முதல் ‘எங்கள் தங்கம்’ திரையரங்குகளில் வெளியாகிறது.

“Tamil Cinema Is My Home; I Want to Act in Many More Tamil Films” – Samantha Gets Emotional at the ‘Engal Thangam’ Press Meet
The press meet of ‘Engal Thangam’, starring Samantha in the lead role, was held in Chennai amidst great enthusiasm. Carrying the striking tagline “This GOLD is BLOODY BOLD,” the film is all set for a worldwide theatrical release on June 19, 2026.
The film has been created by acclaimed filmmaker and producer Raj Nidimoru and directed by the talented B.V. Nandini Reddy. Produced under the banner of Tralala Moving Pictures, the film is jointly produced by Raj Nidimoru, Samantha, and Himank Reddy Duvvuru.
During the event, members of the cast and crew shared interesting insights about the film and their experiences working on it.
Cinematographer Om Prakash ISC described Engal Thangam as a very special project for the entire team. He revealed that while Nandini Reddy is known for her beautiful family and romantic entertainers, she has ventured into completely new territory with this film. He also praised Samantha’s dedication, highlighting that she has performed some of the most intense action sequences of her career in the movie. According to him, the energy and excitement seen in the trailer will continue throughout the film, making it a complete entertainer for audiences.

Veteran actress Gautami said working on the film was a delightful experience. She noted that the shoot was so enjoyable that it felt as though it ended too soon. Gautami explained that one of the main reasons she accepted the project was because of the people behind it, particularly Samantha and Nandini Reddy, whom she admires greatly for their talent, confidence, and professionalism.
She further emphasized that the film’s success should not be attributed to “women power” alone, but rather to the collective talent and hard work of everyone involved. According to her, the film boasts a strong story, excellent direction, quality production values, memorable performances, and outstanding music.
The highlight of the event was Samantha’s heartfelt speech. She shared that Chennai has always felt like home to her and that standing in a place where she spent her college years brought back many memories. Samantha expressed that one regret she has always carried is not having acted in more Tamil films over the years.
She added that she would love to continue working in Tamil cinema if offered strong stories and meaningful characters. Despite not appearing in many Tamil films in recent years, Samantha said the unwavering love and support from Tamil audiences has always touched her deeply and that she remains grateful for it.
Having worked on Engal Thangam not only as an actress but also as a producer, Samantha said the film gave her a deeper understanding of the challenges involved in making and releasing a movie. She acknowledged that the final stages of production were particularly demanding but expressed confidence that the team has created a film they can all be proud of.
She also thanked cinematographer Om Prakash, actress Gautami, and every member of the cast and crew for their contribution to the project. Samantha expressed hope that Engal Thangam would be a film that makes Tamil cinema proud.
Blending family emotions, action, relationships, and an unconventional storyline, Engal Thangam promises to be a complete entertainer. The film features music by Santhosh Narayanan, with the screenplay written by Raj Nidimoru and Vasanth Maringanti, while Prakash Poppadi has contributed additional screenplay.
The film’s editing has been handled by Dharmendra Kakarala, with production design by Ullas Hydoor. The action sequences have been choreographed by internationally acclaimed stunt directors Lee Whittaker and Ejaz Gulab.
With Samantha’s striking new avatar, a unique concept, and a high-energy promotional campaign already generating strong buzz among audiences, ‘Engal Thangam’ is expected to be one of the major theatrical releases of the summer.
The film is set for a worldwide theatrical release on June 19, 2026.
