
ஜூலை 17-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘அன்பே டயானா’ – வண்ணமயமான போஸ்டருடன் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள், காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து உயர்த்தி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி, புதிதாக வெளியிடப்பட்ட கொண்டாட்ட மனநிலையிலான வண்ணமயமான போஸ்டரின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், மணமக்கள் அலங்காரத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் இந்த காட்சி, ஒரு திருவிழா சூழலை நினைவூட்டுகிறது. வண்ணக் கொடிகள், கொண்டாட்ட அலங்காரங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிரம்பிய இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன், கதை, திரைக்கதை மற்றும் இயக்கப் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக, ‘NEEK’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த இரு இளைஞர்களின் காதலை மையமாகக் கொண்ட ஒரு அழகிய Cross-Cultural Love Story ஆக உருவாகியுள்ளது. வடசென்னையின் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறை, காதல், உறவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளரான பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.
‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற மனதை வருடும் வெற்றிப் படங்களை வழங்கிய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த முக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புடன், ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘Anbe Diana’ Set for Worldwide Release on July 17, 2026; Makers Unveil Vibrant New Poster
The makers of ‘Anbe Diana’, an upcoming Tamil romantic family entertainer, have officially announced that the film will hit theatres worldwide on July 17, 2026. The release date was revealed through a vibrant and celebratory new poster that has already begun attracting attention across social media platforms.
Produced by Million Dollar Studios, Neo Castle Creations, and Era Entertainment, the film has steadily built anticipation among audiences through its engaging updates. The latest release announcement has further heightened excitement surrounding the project.
The newly unveiled poster features lead actors Pari Elavazhagan and Ramya Ranganathan dressed as a bride and groom, seated atop a car amidst a joyful celebration. Surrounded by family and friends, the festive atmosphere, colorful decorations, and lively street setting reflect the film’s heartwarming blend of love, family bonds, and celebration. The poster has been widely appreciated by fans for its cheerful and inviting vibe.
Following the attention he received for ‘Jama’, Pari Elavazhagan takes center stage in Anbe Diana not only as the lead actor but also as the film’s writer and director. He is paired opposite Ramya Ranganathan, who won the hearts of young audiences with her performance in ‘NEEK’.
Set against the backdrop of Perambur in Chennai, Anbe Diana is a cross-cultural love story that explores the relationship between two individuals from different cultural backgrounds. Blending romance, humor, and the everyday realities of North Chennai’s middle-class families, the film promises an entertaining and emotionally engaging cinematic experience.
Veteran actress Roja makes a significant return to Tamil cinema with a prominent full-length role after a long gap. The makers believe her character will be one of the film’s major highlights. The supporting cast includes Chethan, Parithabangal Gopi, Ismath Banu, Sudharsan Gandhi, Cell Murugan, and several others in important roles.
The film’s music has been composed by Bharath Shankar, known for his acclaimed work in ‘Mandela’ and ‘Maaveeran’. Cinematography is handled by Shelly Calist, best known for ‘Aruvi’, while editing is by Partha and art direction is by Mahendran. The songs have been penned by Mohanrajan, Muthamil, and Bhakiyam Shankar.
Following the success of emotionally resonant films such as ‘Good Night’ and ‘Tourist Family’, Anbe Diana marks another heartfelt offering from Million Dollar Studios. Produced by Yuvaraj Ganesan, Sathya Karikalan, and R. Saravanan, the film celebrates love, family relationships, and the joy of togetherness.
With its unique blend of romance, family emotions, humor, and cultural diversity, Anbe Diana is expected to emerge as a wholesome entertainer for audiences of all ages when it releases worldwide on July 17, 2026.
