
‘சிங்கம் 3’ படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘ஸ்பெஷல் 26’ படத்தின் கதையைப் பின்னணியாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ஸ்பெஷல் 26’ படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால், தமிழில் 8 பாடல்கள் இருக்கிறது. அனைத்துமே படத்தின் கதையோடு ஒன்றியே இருக்கும். மேலும், அனைத்துமே மாண்டேஜ் பாடல்கள் வடிவிலேயே இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
‘ஸ்பெஷல் 26’ தழுவல் இதுவரை தெரியாத தகவல் அது மட்டும் இல்லாமல் அந்த படகுழுவிடம் சரியான முறையில் உரிமம் வாங்கவில்லை என்றும் ஒரு செய்தி இதனால் தான் இன்னும் படத்தின் டீசர் வெளிவிடவில்லை என்றும் கிசுகிசுக்கபடுகிறது படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் வெளியாகும் என்றும் சொல்லபடுகிறது
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
