
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியாவிலேயே நடத்தப்பட்டுமுள்ளது. இரண்டாவதுமுறையாக அங்கு நடந்து வருகிறது படப்பிடிப்பு. தற்போது நடைபெற்றுவரும் ஷெட்யூல் நாளையுடன் அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறதாம். அன்றே அஜித் அங்கிருந்து புறப்படுகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் மனைவி குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காகவே டிசம்பர் 23-ஆம் தேதியுடன் பல்கேரியா படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி சொன்னாராம் அஜித். பல்கேரிய ஷட்யூலோடு படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிடுகிறதாம். மீதி 20 சதவிகித படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிடவும், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள இப்படத்தில், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் அடிபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இன்று எல்லோராலும் சின்ன அம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவுது தான்