
நல்ல படங்களை எப்போதும் நல்ல வரவேற்ப்பு கொடுப்பது தமிழ் ரசிகர்களின் மனசு என்று தான் சொல்லணும் ஆம் எப்போதுமே ஒரு நல்ல படம் என்றால் அந்த படத்தை கைவிட்டதாக சரித்திரம் இல்லை அப்படி தான் அட்லீயின் முதல் படம் ராஜாராணி படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது இதனால் இவருக்கு அடித்த யோகம் விஜய்யின் தெறி இந்த வாய்ப்பை மிகவும் அழகாக பயன்படுத்தி கொண்டார் என்று தான் சொல்லணும்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை தனக்கு மட்டும் பெருமை சேர்க்காமல் வாய்ப்பு கொடுத்த தளபதிக்கு மிகவும் பெருமையோடு பல சாதனைகளை நிகழ்த்தவும் செய்தார் என்ற பெருமை கொண்ட இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார் அந்த வகையில் தெறி படம் வெளியாகி ஒரு வருடங்கள் மேல் ஆகியும் அந்த படம் மேலும் ஒரு சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளது .
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் தெறி. இப்படம் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே.
தெறி உலகம் முழுவதும் சுமார் ரூ 150 கோடி வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இப்படம் ஹிந்தியில் டப் செய்து ஒரு பிரபல யு-டியூப் சேனலில் வெளியிட்டனர்.
இப்படத்தை தற்போது வரை 50 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர், தமிழில் இருந்து ஹிந்தியில் டப் செய்யப்பட்ட படங்களில் அதிக ஹிட்ஸ் தெறிக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது
