
சமையல் களத்தில் களமிறங்கும் மூன்று ஜாம்பவான்கள்! Celebrity MasterChef Tamil-ன் நடுவர்களாக Chef வெங்கடேஷ் பட், Chef சாசி செல்லையா, மற்றும் ஸ்ரேயா அடுகா
சென்னை, செப்டம்பர் 24, 2026:
சமையல் என்பது வெறும் உணவைத் தயாரிப்பது மட்டுமல்ல… அதில் பாரம்பரியம், கலாசாரம், அனுபவம், படைப்பாற்றல் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அந்த சமையல் உலகை பிரபலங்களின் போட்டியுடன் இணைத்து புதிய அனுபவத்தை தர வருகிறது Celebrity MasterChef Tamil.
Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், சமையல் களத்தின் அனுபவம் வாய்ந்த மூன்று முக்கிய நட்சத்திரங்கள் நடுவர்களாக பங்கேற்கின்றனர். பிரபல Chef மற்றும் Hospitality துறை நிபுணரான Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 வெற்றியாளர் Chef Sashi Cheliah, கோயம்புத்தூரில் உள்ள The French Door நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணரான Chef Shreeya Adka ஆகியோர் இந்த பிரம்மாண்ட சமையல் போட்டியின் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.
மூவரும் தங்களது வெவ்வேறு சமையல் அனுபவங்களையும், உணவு குறித்த ஆழமான புரிதலையும் கொண்டு, போட்டியாளர்களுக்கு சவால்களை வழங்க உள்ளனர். போட்டியாளர்களின் சமையல் திறமை மட்டுமின்றி, அவர்களது படைப்பாற்றல், சுவைத் தேர்வு மற்றும் அழுத்தமான சூழலில் செயல்படும் திறனும் இந்த சமையலறையில் சோதிக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை Banijay Asia தயாரிக்கிறது. Vijay தொகுத்து வழங்க, Samantha Ruth Prabhu Celebrity Judge ஆக இடம்பெறுகிறார். தமிழ் பொழுதுபோக்கு உலகைச் சேர்ந்த பல பிரபலங்கள், இதுவரை தங்களை பார்க்காத ஒரு புதிய கோணத்தில் — சமையல் கலைஞர்களாக — ரசிகர்களை சந்திக்க உள்ளனர்.
“தமிழ் உணவின் கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்” – Chef Venkatesh Bhat
Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நடுவராக இணைந்திருப்பது குறித்து Chef Venkatesh Bhat கூறுகையில்:
“இந்திய உணவு வகைகளை உலக அளவில் கொண்டு செல்வதில் MasterChef போன்ற நிகழ்ச்சிகள் முக்கிய பங்காற்றியுள்ளன. அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இப்போது Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
தமிழ் உணவுக்கு மிகப்பெரிய வரலாறும், தனித்துவமான சுவைகளும் இருக்கின்றன. அந்த சுவைகளின் பின்னால் இருக்கும் பாரம்பரியத்தையும் கதைகளையும் ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும் என்று நம்புகிறேன். தமிழ் உணவின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் இந்தப் பயணத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”
“ஒரு போட்டியாளராக இருந்த சமையலறைக்கு இப்போது நடுவராக திரும்புகிறேன்” – Chef Sashi Cheliah
MasterChef Australia Season 10 வெற்றியாளரான Chef Sashi Cheliah தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்:
“எனது சமையல் பயணம் மிகவும் எதிர்பாராத விதமாக அமைந்தது. Singapore Police Force-ல் பணியாற்றிய நான், ஒருநாள் MasterChef Australia சமையலறைக்குள் சென்று அந்தப் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததே இல்லை.
எனது குழந்தைப் பருவத்தையும் சமையல் பயணத்தையும் உருவாக்கிய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளின் சுவைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. உணவு என்பது நாம் யார், எங்கிருந்து வந்தோம் என்பதை சொல்லும் ஒரு வழி என்பதை அந்தப் பயணம் எனக்கு கற்றுக்கொடுத்தது.
ஒரு போட்டியாளராக MasterChef சமையலறையில் இருந்தபோது ஏற்பட்ட பதற்றம், குழப்பம், உற்சாகம் என அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன். இப்போது அதே சமையலறையை மறுபக்கத்தில் இருந்து பார்க்கப் போகிறேன்.
Celebrity போட்டியாளர்களின் திறமையை அறிந்து கொள்வதோடு, அவர்கள் தங்களது எல்லைகளைத் தாண்டி புதிய விஷயங்களை முயற்சி செய்யும் வகையில் சவால்களை வழங்கவும், அவர்கள் உணவின் மூலம் சொல்லும் கதைகளையும் சுவைகளையும் கண்டறியவும் ஆவலாக இருக்கிறேன்.”
“உணவு மக்களை இணைக்கும் ஒரு அழகான மொழி” – Chef Shreeya Adka
Chef Shreeya Adka கூறுகையில்:
“ஒவ்வொரு கொண்டாட்டமும் நல்ல உணவுடன் தொடங்குகிறது. Sony VIZHA மூலம் அந்தக் கொண்டாட்டம் இன்னும் பெரியதாக மாறுகிறது.
MasterChef பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, உணவு எப்படி மக்களை ஒன்றிணைக்கிறது, உரையாடல்களை உருவாக்குகிறது, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்குகிறது என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
Celebrity MasterChef Tamil அந்த அனுபவத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும். சமையலின் மகிழ்ச்சியுடன் தமிழ் உணவுகளின் வளமான சுவைகள், அதனுடன் இணைந்திருக்கும் கதைகள், பாரம்பரியங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தையும் இந்த நிகழ்ச்சி ஒரே இடத்தில் கொண்டு வருகிறது.
இந்த அழகான பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”
தமிழ் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபலங்கள், சமையல் கலைஞர்களாக தங்களது திறமையை நிரூபிக்கத் தயாராகிவிட்ட நிலையில், அவர்களுக்கு முன் பல்வேறு சுவாரஸ்யமான சவால்களுடன் பிரம்மாண்டமான சமையலறையும் தயாராகியுள்ளது.
Celebrity MasterChef Tamil – விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்!
Three Culinary Powerhouses Unite! Chef Venkatesh Bhat, Chef Sashi Cheliah and Chef Shreeya Adka to Judge Celebrity MasterChef Tamil
Chennai, September 24, 2026:
Cooking is not just about preparing food. It is a celebration of tradition, culture, experience and creativity. Bringing all these elements together with the excitement of celebrity competition, Celebrity MasterChef Tamil is set to offer viewers a fresh and entertaining culinary experience.
Presented by Sony VIZHA and Sony LIV, the show brings together three celebrated names from the culinary world as judges. Renowned chef and hospitality expert Chef Venkatesh Bhat, MasterChef Australia Season 10 winner Chef Sashi Cheliah, and Chef Shreeya Adka, founder of The French Door in Coimbatore and a culinary expert, will take charge of the Celebrity MasterChef Tamil kitchen.
With their diverse culinary backgrounds and deep understanding of food, the three chefs will put the celebrity contestants through a series of exciting challenges. Beyond cooking skills, the contestants will be tested on their creativity, understanding of flavours and ability to perform under pressure.
Produced by Banijay Asia, Celebrity MasterChef Tamil will be hosted by Vijay, while Samantha Ruth Prabhu will appear as the Celebrity Judge. Several popular names from the Tamil entertainment industry are set to step into the kitchen and showcase themselves in an entirely new avatar as culinary contestants.
“We need to take the stories of Tamil cuisine to the world” – Chef Venkatesh Bhat
Speaking about joining Celebrity MasterChef Tamil as a judge, Chef Venkatesh Bhat said:
“Shows like MasterChef have played an important role in taking Indian cuisine to a global audience. Being a part of that journey through Celebrity MasterChef Tamil is a moment of immense happiness and pride for me.
Tamil cuisine has a rich history and a distinctive variety of flavours. I believe this show will introduce audiences to not just those flavours, but also the traditions and stories behind them. I am extremely happy to be part of a journey that celebrates the uniqueness of Tamil cuisine and takes its flavours to audiences across the world.”
“I am returning to the MasterChef kitchen from the other side” – Chef Sashi Cheliah
Reflecting on his journey, Chef Sashi Cheliah said:
“My journey into the world of MasterChef was completely unexpected. I started my career with the Singapore Police Force, and I never imagined that one day I would enter the MasterChef Australia kitchen and eventually win the competition.
The flavours of Indian and Southeast Asian cuisine, which shaped my childhood and my culinary journey, have played a very important role in my life. My MasterChef experience taught me that food can tell us who we are and where we come from.
I have experienced the pressure, confusion and excitement of being a contestant in the MasterChef kitchen. Now, I am going to experience that same kitchen from the other side.
I am looking forward to meeting the celebrity contestants, understanding their skills, pushing them beyond their comfort zones and discovering the stories and flavours they bring to the kitchen.”
“Food is a beautiful language that brings people together” – Chef Shreeya Adka
Chef Shreeya Adka said:
“Every celebration begins with good food, and Sony VIZHA is taking that celebration to an even bigger level.
Having been part of the MasterChef journey, I have personally witnessed how food brings people together, sparks conversations and creates unforgettable memories.
Celebrity MasterChef Tamil takes that experience a step further. The show brings together the joy of cooking, the rich flavours of Tamil cuisine, and the stories, traditions and emotions associated with our food.
I am extremely happy to be a part of this beautiful journey.”
With popular celebrities from the Tamil entertainment industry stepping into the kitchen, Celebrity MasterChef Tamil promises a mix of culinary challenges, entertainment and unexpected moments.
The grand kitchen is ready, the contestants are set, and the culinary battle is about to begin.
Celebrity MasterChef Tamil – coming soon on Sony VIZHA and Sony LIV!
