
தமிழ் சினிமாவில் எத்தனோயோ தயாரிப்பாளர்கள் விநியோகிஸ்தர்கள் வருகிறார்கள் ஆனால் அதில் பலர் ஒரு சில படங்கள் செய்து விட்டு விலகிவிடுவார்கள் அதுவுமின்றைக்கு இருக்கும் சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாரிப்பது என்பது மிக சிரமம் பல முன்னணி நிறுவனங்கள் கூட படங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டனர். ஆனால் கடந்த 25 வருடங்களாக படங்களை தயாரித்து வருபவர் அது ட்ரைடன்ட் ரவீந்திரன் அவர்கள் இன்று சக திரைத்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார் அதில் அவர் பேசியதும் அவர் தயாரித்த படங்கள் வரிசைகளும் இதோ
ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திங்க.
அதன்பின்பு லத்தீப்-யும் நானும் இணைந்து தனியாக பொற்காலம் படத்தை விநியோகம் செய்தோம். அந்த படத்த பாராட்டி எழுதாத பத்திரிக்கைகளே கிடையாது.
தமிழ்நாட்டோட பெரிய ஏரியானு சொல்ற NSC-ல படங்களை வெளியிட்டோம். அவ்வளவு பெரிய ஏரியாவுல நாங்க நல்ல படங்களை ரிலீஸ் பண்ணாலும், நாங்க படத்தை மட்டும் தியேட்டருக்கு கொண்டுபோய் சேத்தோம். அந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டுபோனது நீங்கதான்,
நல்லபடம்னு தியேட்டருக்கு போய் பாத்த பிறகுதான் ஆடியன்ஸ்க்கு தெரியும். ஆனா இது நல்லபடம் நீங்கபோய் பாக்கலாம்னு ஆடியன்ஸை தியேட்டருக்கு Pull பண்றது உங்கமாதிரி Media-தான். நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க நல்ல ஆதரவு கொடுத்திங்க.
அஜித்-கூட வாலி, வில்லன், முகவரி, ஆரம்பம்-னு நிறைய வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.
விஜய்-கூட சச்சின், திருப்பாச்சி, கத்தி, மெர்சல்னு பிரமிக்கிற வெற்றி படங்களை விநியோகம் செய்தோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் காலா, கமல் சாரோட உன்னைபோல் ஒருவன்.. இந்த தமிழ்சினிமாவோட அடையாளமா இருக்கிற படங்களை வெளியிட்டதுல எங்களுக்கு பெருமை.
விஷாலின் பாண்டியநாடு, பூஜை, ஆம்பள
தனுஷின் அது ஒரு கனாகாலம், தேவதையைகண்டேன், கொடி, விசாரணை.
விக்ரமின் பீமா
சிம்புவோட குத்து, சரவணா, அச்சம் என்பது மடமையடா
சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன்
விஜய்சேதுபதியோட நானும் ரவுடிதான்
ஜீவாவின் ராம்
சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சுந்தரபாண்டியன்
சமுத்திரகனியின் அப்பா
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கள்ளழகர்,
முரளியின் பூந்தோட்டம்
பார்த்திபன் அவர்களின் வெற்ற்கொடிகட்டு, அழகி
இப்படி கிட்டதட்ட மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை நாங்கள் வெளியிட்டு இருக்கோம்.
இந்த வெற்றி எல்லாத்துக்கும் உங்க ஆதரவும் ஒரு காரணம்.
விநியோகத்துல் எங்களுக்கு கிடைச்ச வெற்றிக்கு பிறகு நாங்க தயாரிப்புல இறங்கினோம்.
சசிகுமார் நடிச்ச வெற்றிவேல் படம் எங்கள் முதல் தயாரிப்பு, அதன்பிறகு சிவலிங்கா படத்தை தயாரிச்சோம்.
மற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து விக்ரம் வேதா, அவள், லஷ்மி, தமிழ்படம் 2, அறம், ராட்சசன்-னு இந்த வருஷமும், போன வருஷமும் வெளியான முக்கியமான படங்களை தயாரிச்சிருக்கோம்.
நாங்க விநியோகம் பண்ணுன படங்களுக்கு நீங்க கொடுத்த ஆதரவை நாங்க தயாரிக்கிற படங்களுக்கும் கொடுத்திருக்கிங்க.
இப்போ மற்ற தயாரிப்பாளர்களோட இணைந்து சீதக்காதி, ஆயிரா, தேவி 2, தில்லுக்கு துட்டு 2, கமல் சாரோட இணைந்து விக்ரம் நடிக்கிற படங்களை தயாரிச்சுகிட்டு இருக்கோம்.
இதுமட்டுமில்லாம இன்னும் சில படங்கள் தயாரிப்புல இருக்கு. அந்த அறிவிப்புகளை கூடிய சீக்கிரம் வெளியிடுவோம். நாங்க விநியோகம் பண்ண ஆரம்பிச்சு 25 வருஷம் ஆயிருச்சு.
550 படங்களுக்கு மேல வெளியிட்டு இருக்கோம்.
இந்த நவீன காலத்துக்கு ஏற்ப Digital-லயும் Trident Arts களம் இறங்கியிருக்கு.
Web Series-யும் தயாரிச்சு வெளியிடுகிறோம்.
25 வருஷமா.. எங்களோட எல்லா தளங்களிலும் உங்க ஆதரவு தவிர்க்க முடியாம இருந்திருக்கு. அதுக்கெல்லாம் நன்றிகள் பல கோடி