Monday, June 22
Shadow

Tag: #த்ரிஷா

மீண்டும் கன்னட சினிமாவில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
கன்னடத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ’பேட்ட’, ’பரமபதம் விளையாட்டு’ போன்ற படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா ‘ராங்கி’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக த்ரிஷா குதிரையேற்ற பயிற்சியில் சமீபத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தன. இந்த நிலையில், த்ரிஷா நடிக்கும் படத்தின் அடுத்தப்பட அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தை, கன்னடத்தில் பெரும் வெற்றிபெற்ற ’லூசியா’, ’யூ டர்ன்’ வெற்றிப்படங்களை இயக்கிய பவண் குமார் இயக்குகிறார். இவர், சமீபத்தில் இயக்கிய அமலாபாலின்‘குடியெடமைதே’ என்ற வெப் சீரிஸ் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தகது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பவர்’ படத்தில் கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமாருக்கு ஜோ...

சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்க போவதாக த்ரிஷா அறிவிப்பு

Latest News, Top Highlights
தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கும் கதாநாயகிகளில் ஒருவர் த்ரிஷா. தென் திரையுலகின் ராணி என்றழைக்கப்படும் த்ரிஷா திரைதுறையில் 20 ஆண்டுகளை கடந்துவிட்டார். இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தன்னுடைய மனதிற்கு மறதி தேவை என்றும், தான் டிஜிட்டல் தளங்களில் இருந்து விலகியிருக்க விரும்புவதாகவும், குறிப்பாக சமூக வலைதளங்களிலிருந்து சில காலம் விலகி இருக்க போவதாகவும் அறிவித்துள்ளார். இதனை த்ரிஷா "டிஜிட்டல் டீடாக்ஸ்" என்று குறிப்பிடுகிறார்.அதாவது டிஜிட்டல் தளங்களின் போதை நீக்கம் என்று கூறியுள்ளார். மேலும் த்ரிஷா தனது ட்வீட்டில் தனது ரசிகர்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும், இதுவும் கடந்து போகும் என்றும் கூறியுள்ளார். திடீரென த்ரிஷா சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருக்கபோவதாக வெளியிட்ட அறிக்கையினால் த்ரிஷாவின் ரசிகர...
தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்கு சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார். வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார். நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. ...
வெளியாகிறது த்ரிஷாவின் மோகினி அவதாரம்

வெளியாகிறது த்ரிஷாவின் மோகினி அவதாரம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அவரது நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ `1818' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கிறார். இதில் `மோகினி' என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் விஜய் நடித்த `மதுர' படத்தை இயக்கியவரும் இவர் தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விவேக் மெர்வின் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 21-ஆம் தேதியும், இசை ஜனவரி 12-ஆம் தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது....
ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

ஆர்யாவின் காதல் படத்தை இணையதளத்தில் வெளியிட்ட த்ரிஷா, ஹன்சிகா

Latest News, Top Highlights
ஆர்யா அடுத்தாக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் `கஜினிகாந்த்' என்ற படத்தில் நடிக்கிறார். சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையமைக்கிறார். பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆர்யா மற்றும் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த போஸ்டரில் ஆர்யாவும், படத்தின் நாயகி சாயிஷாவும் இணைந்து காதல் செய்வது போன்ற போஸ்டரை அவர்கள் வெளியிட்டனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....