Tuesday, October 27
Shadow

வட சென்னை ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை உண்டு பண்ணும் – தனுஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இந்த படம் மூன்று பாகங்களாக வர உள்ளது தற்போது முதல் பாகத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் பெறும் வரவேற்ப்பு பெற்றுள்ளது வட சென்னை தாதாயிஸத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. கேரம்போர்டு விளை யாட்டு, தாதாயிஸம் என செல்லும் இந்த கதையில் சமுத்திரகனி, கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்துள்ளனர்.

தனுஷின், பிறந்த நாளான நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பெரிய அளவிலான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், வட சென்னை எனது கனவு படம் . என்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள தனுஷ், வடசென்னை டீசரை வரவேற்று படம் வெற்றி பெற வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி படங்கள் எல்லாம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த படம் மேலும் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை .