Monday, April 27
Shadow

Tag: #andriya #vadachennai #dhanush #vetrimaran #ammer

தனுஷ் நடிக்கும் வட சென்னை தேதி உறுதியானது

தனுஷ் நடிக்கும் வட சென்னை தேதி உறுதியானது

Latest News, Top Highlights
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வந்த படம் 'வட சென்னை'. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அக்டோபர் 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன் இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக அக்டோபர் 17...
வட சென்னை ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை உண்டு பண்ணும் – தனுஷ்

வட சென்னை ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை உண்டு பண்ணும் – தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள படம் வடசென்னை. இந்த படம் மூன்று பாகங்களாக வர உள்ளது தற்போது முதல் பாகத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் பெறும் வரவேற்ப்பு பெற்றுள்ளது வட சென்னை தாதாயிஸத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. கேரம்போர்டு விளை யாட்டு, தாதாயிஸம் என செல்லும் இந்த கதையில் சமுத்திரகனி, கிஷோர், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்துள்ளனர். தனுஷின், பிறந்த நாளான நேற்று இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் பெரிய அளவிலான வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், வட சென்னை எனது கனவு படம் . என்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள தனுஷ், வடசென்னை டீசரை வரவேற்று படம் வெற்றி பெற வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி படங்கள் எல்லாம் மிக ...
ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட “வட சென்னை “படத்தின் டீசர்

ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட “வட சென்னை “படத்தின் டீசர்

Latest News, Top Highlights
பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்க்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டனியில் உருவாகியுள்ள படம் ‘வடசென்னை’. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர்,ராதா ரவி இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்திற்க்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கேங்ஸ்டர் த்ரில்லரான இதனை தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தனுஷ் தனது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை படத்தின் டீசரை வெளியிட்டார்.தற்போது படத்தின் டீசர் ஒரே நாளில் யூடூபில் 3மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.மேலும் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது....
பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா!

பிரபல இயக்குநருக்கு மனைவியான ஆண்ட்ரியா!

Latest News, Top Highlights
ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை இதனால் ரொம்பவே அப்செட்டான ஆண்ட்ரியா, சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது, “ரஜினி, விஜய் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்தால் தான் நடிகையா?, அப்போது தான் பட வாய்ப்புகள் கிடக்குமா? என்று கேள்விகளை எழுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில், ஆண்ட்ரியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தனுஷுக்கு ஜோடி யார், என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் குறித்து தகவல் கசிந்துள்ளது. ஆம், அவர் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடிக்கிறாராம்....