
இயக்குநர் வெங்கட் பிரபு, ‘பார்ட்டி’ படத்துக்கான அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்து சிம்பு படத்துக்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டார்.
படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, கார்த்திக் நரேன் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் சிம்பு. இந்தப் பணிகள் ஒரு பக்கம் இருக்க, தனது ‘மன்மதன் 2’ படத்துக்கான முழு கதை உருவாக்கம் வேலைகளையும் முடித்துவிட்டார்.
கதை சிம்புவின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உருவாகி இருப்பதால், தானே அதை இயக்கி, நடித்து தயாரிக்கும் எண்ணமும் தற்போது அவருக்கு உருவாகியுள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என்கின்றனர் சிம்பு தரப்பினர்.
இந்த படத்தில் மீண்டும் நயன்தாரா நடிப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது
