Wednesday, October 28
Shadow

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத் ஜம்வால் – ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ நிகழ்வில் யோகக் கலையின் வலிமையை நிரூபித்தார்!

மும்பையில் நடைபெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது தனித்துவமான யோகா திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் மூலம் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் உலகில் பிரபலமான இந்த கதாபாத்திரத்தின் திறமைகளுக்கு யோகாவும், இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டும் முக்கிய அடிப்படையாக அமைந்துள்ளன.

இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் தால்சிம் கதாபாத்திரம் குறித்த தனது அனுபவங்களை வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டார். அதுமட்டுமின்றி, தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தான் ஏன் பொருத்தமானவர் என்பதையும் தனது செயலால் நிரூபித்தார்.

தால்சிம் கதாபாத்திரத்தில் தோன்றிய காஸ்பிளேயர்களுடன் மேடையில் அமர்ந்த வித்யுத் ஜம்வால், சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு, தனது யோகப் பயிற்சியின் ஆற்றலை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தியானத்தை நிறைவு செய்த பின்னர் பேசிய வித்யுத் ஜம்வால், பதஞ்சலி யோக சூத்திரத்தில் குறிப்பிடப்படும் ஒரு சிறப்பு நுட்பத்தை பயன்படுத்தியதாக தெரிவித்தார். அந்த நுட்பம் நீண்ட நேரம் மூச்சை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமின்றி, வாழ்க்கையில் பல்வேறு இலக்குகளை அடைவதற்கும் தனக்கு உதவியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்த அணுகுமுறையை இளம் தலைமுறையினரிடமும் பகிர்ந்து வருவதாக தெரிவித்த அவர், வாழ்க்கையில் உடனடி வெற்றியை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் பயணிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

“இளம் தலைமுறையினரிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். கொஞ்சம் நிதானமாக இருங்கள். ‘இதை எப்படி அடைவது?’ என்று அனைவரும் அவசரப்படுகிறார்கள். ஆனால், சில விஷயங்களை அடைவதற்கு காலம் தேவை. நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து சற்று விலகி, எதுவும் செய்யாமல் நிதானமாக இருப்பதற்கும் ஒரு திறமை வேண்டும். அந்தத் திறமைதான் உங்களை வாழ்க்கையில் வெகுதூரம் அழைத்துச் செல்லும்” என்று வித்யுத் ஜம்வால் கூறினார்.

யோகா, தியானம் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சியின் மூலம் தன்னை ஒரு புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி வரும் வித்யுத் ஜம்வால், ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் தால்சிம் கதாபாத்திரத்திலும் தனது உடல் மற்றும் மனக் கட்டுப்பாட்டை பயன்படுத்தியுள்ளார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் 2026 அக்டோபர் 16ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

 

Vidyut Jammwal Stuns Fans by Holding His Breath for 15 Minutes at ‘Street Fighter’ Special Event

Actor Vidyut Jammwal left everyone amazed at a special event for the Hollywood film ‘Street Fighter’ in Mumbai, where he demonstrated his exceptional yoga skills by meditating and holding his breath for nearly 15 minutes.

Vidyut Jammwal is making his Hollywood debut as Dhalsim in ‘Street Fighter’. The popular gaming character’s abilities are inspired by yoga and Kalaripayattu, India’s ancient martial art form.

During the special event, Vidyut spoke about his experience of portraying Dhalsim and also demonstrated why he was a perfect choice for the role. Sitting on stage alongside cosplayers dressed as Dhalsim, the actor meditated continuously for 15 minutes, showcasing his remarkable control and yoga practice.

After completing the meditation, Vidyut revealed that he had used a special technique mentioned in the Yoga Sutras of Patanjali. According to the actor, the technique has helped him not only control his breath for extended periods but also achieve several milestones in his life.

Vidyut also shared that he has been teaching this approach to younger generations. He emphasised the importance of meditation, patience and consistent effort, pointing out that achieving meaningful goals takes time.

Speaking to the younger generation, Vidyut said, “I want to tell the younger generation one thing: slow down a little. Everyone keeps asking, ‘How do I achieve this?’ It took me time to achieve what I have today. Everyone around us is constantly running towards something. But learn to slow down and simply be still sometimes. That ability can take you a long way in life.”

Known for his dedication to fitness, martial arts and yoga, Vidyut Jammwal is expected to bring his physical discipline and mental control to the character of Dhalsim in ‘Street Fighter’.

Presented by Paramount Pictures, ‘Street Fighter’ is scheduled to release across India on October 16, 2026, in English, Hindi, Tamil and Telugu.