Thursday, April 25
Shadow

இளையதளபதி விஜயின் 61வது திரைப்படமான ” மெர்சல் “

அட்லி இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் தயாராகி வருவது அனைவரும் அறிந்ததே.

இராமநாராயணின் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் தயாரிக்கும் 100வது படமாக வளர்ந்து வரும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் யோகிபாபு, மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

இப்படதின் உச்சகட்ட காட்சிகள்
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

” மெர்சல் ”
FIRSTLOOK (முதல்பார்வை) இன்று (21.6.17) மாலை 6 மணிக்கு படத்தின் தலைப்போடு வெளியிடப்பட்டது.

இதன் ஆடியோ வெளியீட்டுவிழாவை ஆகஸ்ட்மாதம் பிரம்மாண்டமாக நடத்த ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் கவிஞர் விவேக் பாடல்கள் எழுத ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும், அனல்அரசு சண்டைபயிற்சியையும், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசன் இருவரும் திரைக்கதையையும், ஷோபி நடனபயிற்சியையும் கவனிக்கின்றனர்.

அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவர பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளிராமசாமி
ஹேமாருக்மணி தயாரிக்கிறார்கள்.

இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

Leave a Reply