Wednesday, May 29
Shadow

மதுரை மானூர் ஊர் தலைவரான விஜய் “விஜய் 61” கதை கசிந்தது

தெறி விஜய்க்கு மட்டும் இல்லை தமிழ் சினிமாவுக்கு ஒரு முக்கிய படம் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு மிக பெரிய வெற்றி தந்த படம் என்றும் சொல்லலாம் வசூலில் மிக பெரிய சாதனை படம்மும் என்று தான் சொல்லணும் அது மட்டும் இல்லாமல் விஜய் படங்களில் மிகவும் ரசித்து பார்க்கும் படமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அட்லீயும் ஒரு முழு காரணம் என்று சொல்லணும்.

இந்த ஜோடி மீண்டும் எப்ப சேரும் என்று ஆவலோடு இருந்த ரசிகர்களை ஏங்கவிடாமல் உடனே இந்த கூட்டணி சேர்ந்தது ரசிகர்களுக்கு மேலும் சந்தோசத்தை உண்டுபண்ணியது. இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லபடுகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா மகனாக நடிக்கிறார்கள் அப்பா விஜய்க்கு நித்யாமேனன் ஜோடியாக நடிக்கிறார். இதற்கான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த கட்ட படபிடிப்பில் விஜய் மதுரை மானூர் ஊர் தலைவராக நடிக்க இருக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அட்லி இந்ந்த ஊர் தலைவராக இந்த ஊர் மக்களுக்கு பிரச்சினைகள் தீர்த்து வைக்கும் தலைவர் மட்டும் இல்லாமல் தப்பு செய்பவர்களுக்கு தகுந்த தீர்ப்பு கூறும் தலைவரும் விஜய் தான் அந்த ஊர் மக்களுக்கு தேவையான அடிப்படி வசதிகள் செய்து தரும் தலைவராக நடிக்கிறார். தனது சொந்த செலவில் பள்ளிக்கூடம் மருத்துவமனை கட்டி தரும் போன்ற காட்சிகள் படமாக்க திட்ட மிட்டுள்ளார் இயக்குனர் அட்லி

Leave a Reply