
துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்யின் 62வது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை. இருப்பினும் சில டைரக்டர்களின் பெயர்கள் சில மாதங்களாகவே வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அந்த பட்டியில் மோகன்ராஜா, வெற்றிமாறன், சதுரங்கவேட்டை வினோத் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக தற்போது இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று விஜய்யை விக்னேஷ் சிவன் சந்தித்து பேசியிருக்கிறார். விஜய்யோடு தோள் போட்டுக்கொண்டு தான் எடுத்து கொண்ட போட்டோவையும் விக்னேஷ் சிவன், இன்ஸ்டிராகிராமில் வெளியிட்டிருக்கிறார்.
