
அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘அண்ணாதுரை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் ‘ பிக்சர் பாக்ஸ் கம்பெனி’ நிறுவனம் சார்பில் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார்.
வளர்ந்துவரும் நடிகர்கள் ரேஸில் முன்னணியில் இருப்பவர் என்றால் அது விஜய் ஆண்டனி என்று தான் சொல்லணும் காரணம் புதுவித கதை களம் வித்தியாசமான திரைக்கதை குடும்ப செண்டிமெண்ட் இப்படியான கதைகளை தேர்ந்த்டுத்து நடித்து தொடர்ந்து வெற்றியை பறித்து வருகிறார் அந்த வகையில் இன்று அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் அண்ணாதுரை இந்த படம் முற்றிலும் வித்தியாசமான கதை அம்சம் கொண்டம் படம் அதோடு முன்னணி நடிகர்கள் அதாவது விஜய் மற்றும் விஜய் படங்கள் போல ரிலீஸில் சாதனை செய்துள்ளார்
விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பன்’ படத்தை தொடர்ந்து அலெக்சாண்டர் வெளியிடும் படம் ‘அண்ணாதுரை’. இந்த படத்தை தமிழகம் முழுக்க 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டுள்ளதாக இன்று காலை சென்னையில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் அலெக்சாண்டர். இதுவரை விஜய் ஆண்டனி நடித்து வெளியாகிய எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லையாம் இதுதான் முதல் முறையாம்.
