Saturday, March 25
Shadow

அஜித் ஸ்டைலை பின் தொடரும் விஜய் ஆச்சிரியத்தில் படக்குழுவினர்.

அஜித தமிழ் சினிமாவில் ஒரு உன்னத மனிதர் என்று தான் சொல்லணும் சக மனிதர்களை நேசிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான் என்று சொல்லணும் காரணம் பல விஷயங்கள் அடிக்கிக்கொண்டே போகலாம் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு உதவி செய்வது மதிப்பது என்று சொல்லிக்கொண்டே போகலாம் அது மட்டும் இல்லாமல் அடுத்தவர்களின் திறமையை அந்த இடத்திலே பாராட்டுபவர்.

பொதுவாக எல்லா ஹீரோகளும் தன் படபிடிப்பில் தனக்கு ஷாட் முடிந்தவுடன் கேராவேன் போய் ஓய்வு எடுக்க சென்று விடுவார்கள் ஆனால் அஜித் அப்படி இல்லை என்று தான் சொல்லணும் தனது ஷாட் முடிந்தவுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு அடுத்தவர்கள் நடிப்பதை ரசித்து கொண்டு இருப்பார். அது மட்டும் இல்லாமல் அவர்கள் சிறப்பாக நடித்து இருந்தால் அவர்களை உடனே பாராட்டுவார். இதனால் மற்ற நடிகர் நடிகைகளும் கேரவேன் போகாமல் தளத்திலே அமர்ந்து விடுகிறார்கள். இதனால் படபிடிப்பில் தாமதம் என்பது இல்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். மேலும் படபிடிப்பு முடிந்தவுடன் எல்லோரிடமும் சென்று நான் போயிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தான் வீட்டுக்கு கிளம்புவார் அது லைட்மேன் முதல் கொண்டு சொல்லிவிட்டு தான் செல்வார்.

தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படபிடிப்பில் விஜயும் அஜித் ஸ்டைல் பின் தொடருகிறார் படபிடிப்பு முடிந்தவுடன் எல்லோருடனும் கை குலுக்கிவிட்டு தான் கிளம்புகிறாராம் அது மட்டும் இல்லாமல் சின்ன நடிகர்கள் என்றாலும் தட்டிகொடுத்து பாராட்டுகிறாராம்

Leave a Reply