Wednesday, February 8
Shadow

அஜித்தால் விஜய் சேதுபதிக்கு வந்த புதிய சிக்கல்

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்பது உலகம் அறிந்த விஷயம் இவரை பார்க்க ரசிகர்கள் மட்டும் இல்லை திரையுலக முக்கிய புள்ளிகளும் இவரின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கி தவிப்பவர்கள் இவரை எப்படியாவது ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆதங்கம் இல்லாத ஆளே கிடையாது அதே போல தலைக்கு ஒருத்தரை பிடித்துவிட்டால். போதும் உடனே அவர்களை அழைத்து அவர்களை அன்பாக உபசரிப்பது அவரது கடமையாக செய்து வருகிறார் அப்படி அவருக்கு பிடித்த ஒருத்தரை சமீபத்தில் அழைத்து பேசினார். யார் ?

அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது. தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார்.

அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தார்.

அஜித்துடனான சந்திப்பு விஜய் சேதுபதிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ள சமயத்தில், அவரது மனைவிக்கு பெரும் கோபத்தை கொடுத்துள்ளதாம். ஏனென்றால், விஜய் சேதுபதியின் மனைவி அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தை சந்திப்பதற்கு தன்னை அழைத்துப் போகாததுதான் அந்த கோபத்திற்கு காரணமாம். இருந்தும், கூடிய சீக்கிரத்தில் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றும் முடிவில் இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

Leave a Reply