Friday, November 14
Shadow

விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் தான் விஜய் நடிக்கிறாராம்.

இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்ததாகவும், விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜீவா கூறியிருக்கிறார்.

அந்த 100-வது படத்திற்கான கதைகள் கேட்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்யின் ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களை சூப்பர் குட் பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமான ‘மெர்சல்’ படத்திலும் விஜய் தான் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply