Sunday, June 21
Shadow

Tag: #vijay62

விஜய்க்கு வில்லனான அரசியல்வாதி

விஜய்க்கு வில்லனான அரசியல்வாதி

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் கருப்பு நிற கோர்ட் ஷூட் போட்டு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதையடுத்து நேற்று சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் விஜய் மல்டி மில்லியனராக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இவர்கள் கூட்டணியில் பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவும் இணைந்திருக்கிறார். இவர் இப்படத்தில் வி...
ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

ஒரு ரசிகையாகவே விஜய்யுடன் நடிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது மீண்டும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாகி இருக்கிறார். இதுபற்றி கீர்த்தி சுரேஷ் பேசும் போது, “மீண்டும் விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை என்னுடன் நடிக்கும் நடிகராக எப்போதும் பார்க்க முடியாது. அவருடன் நடிக்கும் போது எனக்கு பிடித்த நடிகருடன் இருக்கும் ரசிகையாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். நான் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடித்திருக்கிறேன். நாக் அஸ்வின் இதை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது மேக்கப்போட மட்டும் மூன்றரை மணி நேரம் ஆனது. பின்னர் அது பழகிப்போனது. சாவித்ரி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அவ்வளவு பெரிய நடிகை பாத்திரத்தில் நடிக்க பயமாக இருந்தது. இப்போது இந்த படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாவித்ரி மகளிட...
விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

விஜய்யின் அடுத்த படத்திற்கு இப்போவே பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கியிருக்கிறது. அதன்படி விஜய்யின் அடுத்த படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது படத்தில் தான் விஜய் நடிக்கிறாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்ததாகவும், விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஜீவா கூறியிருக்கிறார். அந்த 100-வது படத்திற்கான கதைகள் கேட்கும் வேலை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய்யின் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'திருப்பாச்சி', 'ஜில்...
கிளாப் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

கிளாப் அடித்து ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்

Latest News, Top Highlights
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `தளபதி 62' படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று பூஜையுடன் படம் ஆரம்பமானது. இதில் விஜய் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி...
புத்தாண்டில் விஜய் 62 படத்தின் புதிய அறிவிப்பு?

புத்தாண்டில் விஜய் 62 படத்தின் புதிய அறிவிப்பு?

Latest News, Top Highlights
‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார். `துப்பாக்கி', `கத்தி' படங்களை தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு வருகிற ஜனவரி இரண்டாவது பாதியில் அல்லது பிப்ரவரியில் தொடங்குகிறது. படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு தலைப்பு இன்னமும் வைக்கப்படாத நிலையில், புத்தாண்டை முன்னிட்டு விஜய் 62 படத் தலைப்பு வெளியாக இருப...
A.R.முருகதாஸ்வுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் உறுதியானது மேலும் பிரபல நடிகர் இந்த படத்தில் இணைகிறார்.

A.R.முருகதாஸ்வுடன் மீண்டும் கூட்டணி சேரும் விஜய் உறுதியானது மேலும் பிரபல நடிகர் இந்த படத்தில் இணைகிறார்.

Latest News
விஜய் 61 படத்தின் படபிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது இந்த படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிப்பது முதல் முறை இதனால் ரசிகர்கள் மேலும் சந்தோஷத்தில் உள்ளனர் அது மட்டும் இல்லாமல் வெற்றி கூட்டணி வேறு சொல்லவா வேண்டும் மேலும் இப்படத்தின் சுவாரிசியம் என்றால் விஜய்யின் ராசி நடிகைகள் அதவாது 1௦௦ கோடி வசூல் நாயகிகள் வேறு இந்த படத்தில் சும்மா விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையபோகிறது. இதை விட விஜய் ரசிகர்களுக்கு மிகபெரிய சந்தோசம் என்னவென்றால் விஜய் 62 என்பது தான் உண்மை காரணம் விஜய்யின் பாக்ஸ் ஆபீஸ் இயக்குனர் A.R.முருகதாஸ்வுடன் இணைவது அது மட்டும் இல்லாமல் இப்போது இன்னும் ஒரு சந்தோசம் கூடுகிறது. அது என்ன தெரியுமா நடிகர் சிம்பு தான் இந்த படத்துக்கு இசையமைப்பாளர், என்று செய்திகள் கசிந்துள்ளது . அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சென்னையில் நடைபெற்று வரும் படப்...